கிரிக்கெட்டில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்து விட்டது. இந்நிலையில் இதன் அடுத்த பரிணாமமாக சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அறிமுகமாகிறது ஆஸ்திரேலியாவின் கூக்கபுரா நிறுவனம் இந்த சிப் பொருத்தப்பட்ட பந்துகளை  அறிமுகம் செய்கிறது.

இந்த ஸ்மார்ட் பந்தின் சிறப்பு அம்சங்கள்: மிகவும் சிறிய அளவில் கீழே விழுந்து விடாத அளவில், அதிர்வுகளைத் தாங்கக் கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்படும்.

இதன் மூலம் வீசப்படும் பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து ரிலீஸாகும் போது அதன் வேகம், தரையில் பட்டு பவுன்ஸ் ஆகும்போது அதன் வேகம், பவுன்ஸருக்குப் பின் பேட்ஸ்மேனைக் நோக்கிச் செல்லும் வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும்.

 பந்து எந்தப் பக்கம் சுழலும், எந்தப் பக்கம் செல்லும் என்பதை பந்து காற்றில் சுழன்று செல்லும்போதே கண்டுபிடிக்க இயலும்.

டிஆர்எஸ் முறை இருந்தாலுமே அதிலிருந்து கிடைக்கும் அவுட் முடிவுகள் மிகத்துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் பால் வந்துவிட்டால், உண்மையில் பந்து ஸ்டெம்பில் பட்டதா, அல்லது உரசிச் சென்றதா, பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டு பேட்டில் பட்டதா அல்லது நேரடியாக பேட்டில் பட்டு கால்காப்பில் பட்டதா என்பதை மிகத் துல்லியமாக அறிய முடியும்.

 கேட்ச் பிடித்ததில் சர்ச்சை எழுந்தால்கூட பந்து எந்த நேரத்தில் கேட்ச் பிடிக்கப்பட்டது, தரையில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே பிடிக்கப்பட்டதா என்பதை துல்லியமாக அறியலாம். 

இந்த ஸ்மார்ட் பந்துகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் பந்துகள் முதல்கட்டமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி20 போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. இதில்  கிடைக்கும் வெற்றியை பொறுத்து சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY