கிழவனை குமரனாக்கும் கடுக்காய்!

180
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த பொடிகளை இரவில் தன்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு  கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
 
நாவரட்சி, தலை நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண் நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற  நோய்களை கடுக்காய் குணப்படுத்தும்.
 
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய்  தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்க வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகும்.
 
கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.  கடுக்காய்ப் பொடியை கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
கண் பார்வைக் கோளாறுகள், புண்கள் ரத்தக் கோளாறுகள்,  உயிரணுக் குறைபாடுகளுக்கு அருமருந்து கடுக்காய்.
இதை சித்தரகள் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே”. என்பர்.

LEAVE A REPLY