ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பிரத்யேக வித்தியாச விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.1300. சென்னையில் மார்ச் 23, 31 தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

LEAVE A REPLY