ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை… தேர்தல் கமிஷனில் மனு

0
290

 அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டு பிரிவுகள் உருவானது. இதனால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டது. ஆனால். சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற பின், எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி என்று மூன்று அணிகள் உருவானது. பின்னர் இபிஎஸ்,ஓபிஎஸ் அணிகள்  இணைந்து பொதுக்குழுவை கூட்டியது. இதில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பொதுக்குழு முடிவிற்கு எதிராக ஓபிஎஸ் அணியில் இருந்த கே.சி. பழனிச்சாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதிமுக கட்சி மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து சசிகலா தரப்பு விளக்கத்தை கோர்ட் கேட்டிருந்தது. இதையடுத்து சசிகலா தரப்பு 12 பக்க விளக்க அறிக்கை தாக்கல் செய்தது. அதில்  பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது கட்சியில் செய்த மாற்றத்தை ஏற்க கூடாது. கே.சி. பழனிசாமி, ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்று கையெழுத்திட்டவர் கே.சி. பழனிசாமி என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY