ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இன்று ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் கொடைக்கானலில் ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமான 2 பங்களாக்கள்,ஊட்டி பங்களா, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு.கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டில் உள்ள டென்னிஸ் கிளப், டெல்லி வீடு, லண்டன் சொகுசு பங்களா ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY