காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை ரத்து செய்தது. இந்நிலையில் லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. லடாக் எல்லையில் பாகிஸ்தான் பகுதியான ஸ்கர்டு விமானப்படை தளத்தில் ஜே.எப்.17 ரக போர் விமானங்களை நிறுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த விமானப்படை தளத்தில் சரக்கு மற்றும் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சி-130 சரக்கு விமானங்கள் விமானப்படை தளத்துக்கு வந்து சென்றுள்ளதால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY