பிரான்ஸ் தலைநகர், பாரிசில் 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த  தீ விபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை எரிய தொடங்கியது. இதையடுத்து  தீ, தேவாலயம் முழுவதும் பற்றி மேற்கூரை இடிந்து விழுந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது. 

 

இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் டுவிட்டர் தெரிவித்ததாவது: ’14ம் நூற்றாண்டு முதல்,  உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து போட்டோக்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார். 

யுனெஸ்கோ தலைவரான ஆட்ரி அசூலே கூறுகையில், ‘ கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உள்ளுணர்வை ஆழமாக பாதித்துள்ளது. எங்கள் நிறுவனம் இந்த சூழலை தற்போது கண்காணித்து வருகிறது. விலை மதிப்பில்லாத இந்த பாரம்பரியத்தை மீட்க நாங்கள் என்றும் துணை நிற்போம்’ என்றார். 

LEAVE A REPLY