கத்தியை காட்டி மிரட்டி பெரம்பலூர் ஆசிரியையிடம் செயின் பறிப்பு

73

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில் பகுதியில் வசிப்பவர் முத்துசாமி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி(45). இவர் குன்னம் அருகே ஒதியம் கிராம அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை. இந்நிலையில் இன்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு  சென்று கொண்டிருந்தார். சமத்துவபுரம் என்ற இடத்தில் சென்றபோது அவ்வழியே மங்கி தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு புல்லட் மற்றும் பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்தனர். கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் மதிப்புள்ள 2  தங்கசெயின்களை  பறித்து கொண்டு தப்பினர். இது ஆசிரியை செந்தமிழ்செல்வி குன்னம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY