தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழும உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் 2465 இரண்டாம் நிலை காவலர்கள் ( ஆயுதப்படை), 5962 இரண்டாம் நிலை காவலர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான விளம்பரம் கடந்த 6-3-2019 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது. சென்னை உள்பட 32 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. 

எழுத்து தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட அனுமதி சீட்டு இக்குழும இணையதளத்தில் இன்று (13 ஆம் தேதி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டை www.tnusrbonline.org என்ற  இணைய தளத்தில் தமது பயனர் அடையாள எண்(user name) மற்றும் கடவுச்சொல்லை( passward) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் செலுத்தி உரிய  செலுத்து சீட்டு பெற்றிருந்தும் தேர்வு கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உதவி மைய தொலைபேசி எண்கள் 044-40016200  மற்றும் 97890 35725 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY