நாயகன் மறுநாள்  திருமணம் நடக்கவுள்ள  நிலையில் முதல் நாள் நண்பர்களின் அறைக்கு செல்கிறான். அங்கு போதைக்கு ஆளாகிறான். இன்னொரு புறம் கடத்தல் கும்பலும், போலீசும் போதை நடவடிக்கை குறித்து எழுதும் பத்திரிக்கை நிருபரை மிரட்டுகின்றனர். இந்த இரண்டு கதையும் ஒரு புள்ளியில் இணைகிறது. போதையால் வாழ்க்கை எந்த அளவு சுக்கு நூறாகும் என்பதை சொல்கிறது “போதை ஏறி புத்தி மாறி” படம். 

 மிக எளிமையான ஒரு கருத்தை சுவாரஸ்யபடுத்த, மிகச்சிக்கலான திரைக்கதை அமைக்க முயன்று தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் நல்ல கதைக்கரு வீணடிக்கப்பட்டுள்ளது.  நண்பர்கள் கூடி தண்ணியடிப்பதுதான் படத்தின் முக்கிய பகுதி. ஆனால் இப்படத்தில் நண்பர்களின் உரையாடல் சுவாரஸ்யமின்றி போகிறது.  நாயகன் போதையில் செய்ததை சொல்வதுதான் படத்தின் கரு, ஆனால் அதை மாற்றி அவனை நல்லவனாக்க முயற்சிப்பது ஏனென்று தெரியவில்லை.

தீரஜ் அறிமுக நாயகன். அவரது முகம் அப்பாவி பாத்திரங்களுக்கு செட்டாகக் கூடியது. முதல் படம் என்கிற பதட்டமில்லாமல் நடித்திருக்கிறார். இயக்குனர் சந்துருவை பாராட்டலாம். நாயகி துஷாராவுக்கு ஊறுகாய் வேடம். தமிழுக்கு அழகான கதாநாயகி. விழிகள் அதிகம் பேசுகிறது. ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் சில ஃஸ்பெஷல் எஃபெக்ட்களை கேமராவிலேயே  ஜாலம் செய்திருக்கிறார். தீவிர திரில்லர் விரும்பிகளுக்கு பிடிக்கலாம். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 

LEAVE A REPLY