பொட்டு அம்மன் உயிருடன் இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்தார். சமீபத்தில் வவுனியாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய துளசி,  சில தனிப்பட்ட நபர்கள் தமது நலன்களுக்காக பொட்டு, அம்மான் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்றார். எங்களைப்பொறுத்தவரை  புலிகள் அமைப்பின் தலைவர் எவரும் தற்போது உயிருடன் இல்லை. பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தற்போது கூறுபவர்கள், எதிர் காலத்தில் தமது நலன்களுக்காக புலிகளின் ஏனைய தலைவர்களான பால்ராஜ் அல்லது கிட்டு போன்றோரைக் கூட உயிருடன் உள்ளார்கள் என்று கூறுவார்கள். புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பது, அவர்களுடன் முள்ளிவாய்க்காலில் இணைந்து நின்று போராடிய, இப்போதைய புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளுக்கே தெரியும் என்றும் துளசி  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY