நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் மீது பல மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற பவர் ஸ்டார் வீடு திரும்பவில்லையாம். அவரை பல இடங்களில்  தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாரேனும் கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 10 கோடி ரூபாய் கொடுத்தால் 1000 கோடி கடன் பெற்று தருவதாக போலியான வாக்குறுதியை அளித்து ஏமாற்றியதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY