வாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை!

255

உ.பி மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களமிறக்கப்படலாம் என்று தகவல்வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் வரும் 29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவார் எனவும், கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரி போட்டியிடுவார் எனவும், கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி அறிவித்துள்ளது. அஜய் ராய் கடந்த தேர்தலிலும் இங்கு போட்டியிட்டு 3 வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY