மோடி பற்றிய ராகுல் விமர்சனம் தவறானது.. தேவகவுடா கருத்து

82

பெங்களூரில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தேவகவுடா: மோடி அரசு விளம்பரத்திற்காகவே சிலவற்றை செய்கிறது. விளம்பரத்திற்காக நாட்டின் வேறு எந்த பிரதமரும் இந்த அளவிற்கு பணத்தை செலவிடவில்லை. கார்ப்பரேட்களின் பணத்தில் மோடி விளம்பரம் தேடுகிறார். 
ரபேல் விவகாரத்தை பொறுத்தவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பாக கையாள்கிறார். ஆனால் பிரதமர் ஏன் வாய்திறக்காமல் அமைதி காக்கிறார்? ஏன் ரபேல் ஒப்பந்தம் பற்றி பார்லி.,க்கு வெளியில் மட்டும் பேசுகிறார்? ராகுல், மோடியை திருடன் என்று சொன்னதை என்னால் ஏற்க முடியாது. பிரதமரை அவமதிக்கும் வகையிலான எந்த பேச்சும் தவறானது. அவர் நாட்டின் பிரதமர். அரசியல் கட்சி தலைவர் அல்ல என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு. வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. பிரசாரம் மட்டும் செய்வேன். காங்., உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராகுல் வளர்ந்து வரும் இளம் தலைவர். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. இருந்தும் இன்னும் மேம்படுத்த தளம் அமைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணி கட்சி தலைவரான அவர் பிரதமராவதற்கு அவரை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ராகுல் பிரதமராக வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். 

LEAVE A REPLY