ரஜினி நடித்து வெளியாகியுள்ள 2.o படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து “பேட்ட” பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கான புரமோட்டிங் பணிகளில் சன் பிக்சர்ஸ் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது முருகதாஸ் என்பதெல்லாம் பழைய தகவல். அரசியல் என்று முடிவு செய்து விட்ட ரஜினி தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தான் கட்சியின் பெயரை அறிவிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த படத்திற்கான பணிகளை துவக்குமாறு ரஜினி டைரக்டர் முருகதாசுக்கு சிக்னல் கொடுத்து விட்டதாக  கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை வைத்து மிகப் பெரிய ரிஸ்க் எடுத்ததற்காக லைகா நிறுவனத்திற்கான பரிசாக இந்த படத்தையும் தயாரிக்க கூறியிருக்கிறார் ரஜினி. சர்கார் படத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற கேள்வி ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டே அரசியல் தொடர்பான ஒன்லைன் கதையை முருகதாஸ் கூற அதனை கேட்ட ரஜினி கைகொடுத்து ஓகே என்றிருக்கிறார். முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்திற்கு ‘ நாற்காலி’  என்று பெயர் வைக்கலாமா? என முருகதாஸ் கூறியதை கேட்ட ரஜினி ரசித்திருக்கிறார். படம் தொடங்கும் நேரத்தில்தான் டைட்டில் குறித்து தெரியவரும் என்கின்றனர் லைகா நிறுவனத்தினர். 

LEAVE A REPLY