ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் வரும் 10ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் மறுமணம் நடைபெறுகிறது.  12ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிலையில் திருமண அழைப்பிதழை பிரபலங்களுக்கு ரஜினியே நேரில் சென்று கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோருக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை தந்தார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கும் ரஜினி நேரில் சென்று பத்திரிகை கொடுத்தார். இந்த போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் நாசர் மனைவி கமீலா பொறுப்பில் இருக்கிறார். ரஜினி கமல்ஹாசனுக்கு திருமண அழைப்பிதழ் தந்தபோது நாசர் மனைவியும் அங்கிருந்தார். அவர்கள் 3 பேரும் எடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY