பேட்ட படத்தின் ஒவொரு காட்சியிலும் தன்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்கவைத்தார்கள் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அமெரிக்க சென்றிருந்த ரஜினி சென்னை திரும்பினார். அதை தொடர்ந்து அவர் தன்னுடைய போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பேட்டேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ரசிகர்களின் சந்தோஷமே என்னுடைய சந்தோஷம் என்று ரஜினி கூறினார். அப்போது பழைய ரஜினியை பார்த்தது போல் இருக்கிறது என பலரும் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு இந்த பாராட்டு காரத்திக் சுப்புராஜ்க்கு தான் போக வேண்டும். அவர் தான் என்னை உசுபேத்தி உசுபேத்தி நடிக்க வைத்தார் என்றார் ரஜினி. 

LEAVE A REPLY