இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14 ம் தேதி கூடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை நியமித்தார். மறு நாள், நவம்பர் 16ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்கிவைப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் நவம்பர் 5 ஆம் தேதி கூட்டப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. பின்னர் எம்பிக்களிடையே பேசிய சபாநாயகர் கரு. ஜெயசூர்ய பாராளுமன்றம் நவம்பர் 7ஆம் தேதி கூட்டப்படலாம் என்றார். ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.இந் நிலையில்தான், நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி கூட்டப்படும் என்று சிறிசேனா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சபாநாயகர் கரு.ஜெயசூரியா நாடாளுமன்றம் கூடுவது தள்ளிப் போவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது. ரணில்விக்கிரம சிங்கேதான் பிரதமராக நீடிக்கிறார் என்று அறிவித்திருக்கிறார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

LEAVE A REPLY