ஈரானில் இருந்து போயிங் 707 என்ற ராணுவத்திற்கு சொந்தமான காா்கோ விமானம் ஒன்று உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டது. விமானத்தில் 16 போ் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

விமானம் பறந்துகொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 15 போ் உயிாிழந்திருப்பதாக ஈரான் ராணுவத்தினா் தொிவித்துள்ளனா். வானிலை மோசமடைந்து இருந்ததால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அந்நாட்டு அதிகாாிகள் விசாரணை  நடத்தி வருகின்றனா். 

LEAVE A REPLY