வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. 27 ஆம் தேதி முதல் மழை தொடங்கும். இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதிகளில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும். இந்திய வானிலை மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் அலர்ட் என்ன?: அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். இந்த எச்சரிக்கை பச்சை,மஞ்சள், ஆம்பர் மற்றும் சிவப்பு எச்சரிக்கை என நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY