அமெரிக்க கிரீன் கார்டு விதியில் தளர்வு

58

 அமெரிக்காவில், குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்வதற்கு, பிற நாட்டினருக்கு, ‘எச் – -1பி’ விசா வழங்கப்படுகிறது.  இந்த விசா வைத்திருப்போர், அங்கு 3 ஆண்டுகள் தங்கி பணிபுரியலாம்.பணி சிறப்பாக இருந்தால், மேலும் 3 ஆண்டுகளுக்கு விசாவை நீட்டிக்கலாம். 6 ஆண்டுகளுக்கு பின், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற, கிரீன் கார்டு பெற வேண்டும். இதை பெற 10 ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இதனால், பலர் குடும்பத்தைப் பிரிந்து, அமெரிக்காவில் வாழ வேண்டிய நிலை உள்ளது. 
இதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், புதிய மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாட்டுக்கும், கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள, 7 சதவீத கட்டுப்பாட்டை உயர்த்தவும், ‘முதலில் வந்தவருக்கு முன்னுரிமை’ என்ற ரீதியில், கிரீன் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இது இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY