‘சர்கார்’.  படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:‘சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. அப்படி சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்போம். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வரிடம் விவாதிப்போம்’ என்றார்.

சர்கார் படத்தின் கதை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு பிரச்னை ஏற்பட்டது. பின்னர் சமரசமாகி படம் வெளியானது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY