தீபாவளியன்று திரைக்கு வந்த விஜய்யின் சர்க்கார் படத்தில் தமிழக அரசை விமர்சனம் வகையில் சில காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் சிலவற்றை உடைக்கும் காட்சிகள் தான் இதற்கு காரணம் என தெரிகிறது. சம்மந்தப்பட்ட காட்சிகளை விஜய் தானாக முன்வந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் சர்க்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிரடியாக கூறியுள்ளார். அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து விஜய்யையும், சர்க்கார் படத்தை விமர்சிப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY