அறிவியலால் கடவுளை அளக்க முடியுமா?

72

புத்தர் என்பது ஒரு ஆளுமை. மக்களில் இருந்து தோன்றி ஞானம் பெற்ற ஒரு ஆளுமையே புத்தர். அறிவின் நிலையில் இருந்து ஒவ்வொன்றையும் ஆராயச் சொன்னவர் புத்தர். உணர்வின் பிரதிபலிப்பாக மட்டுமே வாழ்வு அமைந்து விடக் கூடாது என்பதை கவனப்படுத்தியவர் புத்தர். இந்த நிலையில் இருந்துதான் மற்ற மதம் சார்ந்த பெரியவர்களிடம் இருந்து புத்தர் மாறுபடுகிறார். உலகில் உள்ள மற்ற மதங்கள் அறிவியல் கருத்துகளுக்கு  செவிமடுப்பது இல்லை. அறிவியலால் கடவுளை அளக்கவே முடியாது என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர். பவுத்தம் அறிவுறுத்தும் கருத்தில், கொள்கையில் ஏதேனும் தவறு இருக்கிறது என்று அறிவியல் சுட்டிக் காட்டினால், அவற்றை விலக்கிவிடவும் பவுத்தம் தயங்கியதில்லை. அதனால்தான் புத்த ஞானத்திலும், பவுத்தத்திலும் பொய்மைக்கும் கற்பனை சரடுக்கும் வேலையில்லாமல் போனது என்கின்றனர் பவுத்த அறிஞர்கள்.  புத்தர் தனது வாழ்நாளில் சொன்னவற்றைக் குறிப்பிடும்போது ‘புத்தரின் போதனைகள்’, ‘உபதேசங்கள்’ ‘அறிவுரைகள்’ என்றே குறிப்பிடுகின்றனர். உபதேசம், அறிவுரை, போதனைகள் எனும்போதே அங்கே உயர்ந்த பீடம் ஒன்று வந்து விடுகிறது. எல்லோரும் எப்போதும் சமத்துவத்தை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டும் என்று விரும்பிய புத்தரை, மற்ற தத்துவ ஆளுமைகளுடன் சேர்த்துவிடக் கூடாது. அந்த வட்டத்துக்கு வெளியே நிற்பவர்தான் புத்தர் என்கின்றனர் அம்மத பெரியோர். பொதுவாக உருவ வழிபாட்டை மறுத்த, புத்தரின் உருவத்தையே வணங்கும் ஒரு பிரிவு பின்னாளில் பவுத்தத்தில் உருவானது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY