செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் குவிந்தனர்

177

அமமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணையப் போவதாக கடந்த 10 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார். இதற்காக நேற்று நள்ளிரவு செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் கரூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் 500 வேன்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்தனர். செந்தில்பாலாஜி திமுகவில் இணையும் நிகழ்வில் அவருக்கு ஆதரவு தரும் வகையில் அவர்கள் வந்துள்ளனர். தற்போது சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஹோட்டல்களில் 513 அறைகளில் தங்கியுள்ளனர். செந்தில் பாலாஜி இணையும் நிகழ்வில் திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே . என்.நேரு.கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கே சி பழனிச்சாமி, சின்னசாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து 10 நாள் பரபரப்பு முடிவுக்கு வருகிறது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY