கவர்ச்சிக்காக நாங்கள் போட்ட டிரஸ்ச.. சாதாரணமா போட்டுக்குறாங்க ஜெயமாலினி

163
முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெயமாலினி நிருபர்களிடம் கூறியது: கவர்ச்சியாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு உள்ள முக்கியத்துவம் எனக்கும் இருந்தது. நிறைய காதல் கடிதங்கள் வந்தன. அப்போது கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் நடிகைகளை தொடமாட்டார்கள். பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பது இல்லை. நடிகைகளை கவுரவமாக மரியாதையாக நடத்தினார்கள். கவர்ச்சியாக ஆடியதால் வெளியில் யாரும் என்னை குறைவாக மதிப்பிடவில்லை. இப்போது நிலைமைகள் மாறி இருக்கிறது. அன்றைக்கு நாங்கள் கவர்ச்சி நடனம் ஆட அணிந்த உடைகளை இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. இவ்வாறு ஜெயமாலினி பேட்டியளித்தார்.

LEAVE A REPLY