இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். வேறொரு நடிகரை கொண்டு, மாநாடு படம் உருவாகும் என்றும் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு அடுத்ததாக ’மகா மாநாடு’ என்ற படத்தை இயக்கி, நடிக்க உள்ளதாகவும். 125 கோடி  ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிம்பு குடும்பத்துடன் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது ’மகா மாநாடு’ படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இப்படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் உருவாக உள்ளதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY