By செந்தில்வேல் – May 27, 2022
Share E-Tamil News
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 67. தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து சிம்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் "எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
டி.ஆர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது தீவிர ரசிகரான, காமெடி நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலை கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.