அனுமதியின்றி வளர்க்கப்பட்ட யானை... திருச்சி முகாமில் சேர்க்கப்பட்டது....

By செந்தில்வேல் – May 27, 2022

648

Share E-Tamil Newsமதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் 22 வயது உடைய பெண் யானை ஒன்று வளக்கப்படுவதாவும் பீகாரில் வாங்கப்பட்ட அந்த யானையை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சிலர் வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட வன துறைக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் வளர்க்கப்ப்ட்ட  ரூபாலி யானையை பறிமுதல் செய்த அதிகாரிகள்  திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.   புது வரவான ரூபாலியை தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார் மற்றும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் சம்பத் குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டு அதனை முகாமில் சேர்த்தனர். மதுரதிருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா , இந்து , ரோகினி , இந்திரா என்ற யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ரூபாலி யானை வந்துள்ளதால் மொத்தம் 9 யானைகளை திருச்சி மாவட்ட வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.