By senthilvel – January 23, 2022
Share E-Tamil News
மதுரை எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவி கலாவதி(42). இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல பணிக்கு வந்த அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து உள்ளார். காவல் நிலையத்தில் உள்ள போலீசார், அவரை காரில் கொண்டு சென்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துள்ளதாக தொிவித்தனர். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு (‘லோ சுகர்’) உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாக தெரிகிறது. எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். கலாவதியின் கணவர் தேவராஜ் அரசு போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி, செந்தில்குமார் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் 7-ம் வகுப்பும், இளைய மகன் 3-ம் வகுப்பும் படிக்கிறார்கள். கலாவதியின் இறுதிச் சடங்கு பாலமேடை அடுத்த வலையபட்டி கிராமத்தில் நடக்கிறது.