திருச்சி ஜல்லிகட்டில் மாடு முட்டி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் பலி.....

By senthilvel – January 23, 2022

534

Share E-Tamil Newsதிருச்சி பள்ளப்பட்டியில் நேற்று ஜல்லிகட்டு நடைபெற்றது. இதில் 750 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டானது மாலை 3 மணி வரை நடத்தப்பட்டது.  601 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 21 மாடு பிடி வீரர்கள், 3 பார்வையாளர்கள் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். இதில் சசி கில்பட் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம்,  அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.