By senthilvel – January 23, 2022
Share E-Tamil News
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த தேவராயநேரியில் ஏராளமான நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர் - இதில் பலர் மான் கொம்பு,நரியின் பற்கள்,யானை முடி மற்றும் தந்தத்தின் பகுதிகளை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து திருச்சி வனத்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.இதன் காரணமாக திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இன்று அப்பகுதி
முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தேவராயநேரியை சேர்ந்த அருண் பாண்டி மற்றும் சௌந்தர்ராஜன் யானையின் தந்தத்தை வைத்து இருந்தது தெரியவந்தது . இதனையடுத்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தால் ஆன பொருட்கள், புலி நகம், நரி பல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.