By senthilvel – January 23, 2022
Share E-Tamil News
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை தாக்குவதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 7-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8-ம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளையும், பிப்ரவரி 9-ம் தேதி கிராஞ்சியில் 24 படகுகளையும், பிப்ரவரி 10-ம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளையும், பிப்ரவரி 11-ம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது.