இந்திய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு......

By senthilvel – January 23, 2022

534

Share E-Tamil Newsஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி, தொடரை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் விளையாடியது.தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரரான டி காக் சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் வான்டெர் துஸ்சென் 52 ரன்களும் (59 பந்துகள்) டேவிட் மில்லர் 39 ரன்களும் (38 பந்துகள்) பிரிட்டோரியஸ் 20 ரன்களும் (25 பந்துகள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்கள் முடிவில் 287 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 19 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 186 பந்துகளுக்கு 185 ரன்கள் எடுக்க இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.