அக்காவுக்கே போலி இறப்பு சான்றிதழ்… பலே தம்பி கைது

80

மஹாராஷ்டிரா மாநிலம்  மாஸ்வி தாலுக்காவைச் சேர்ந்தவர் ரங்குபாய் ஜகந்நாத் ஷிர்கே. இவர் எல்.ஐ.சி பாலிசி எடுத்திருந்தார். இந்த பாலிசிக்கு நாமினியாக தன் சகோதரர் பிரகாஷ் ஸ்ரீபதி மாந்த்ரேவை குறிப்பிட்டிருந்தார். சகோதரியின் காப்பீட்டுத் தொகையை எப்படியாவது தான் பெற்றுவிட பிரகாஷ் திட்டமிட்டார்.

இதையடுத்து அவரது நண்பரின் உதவியுடன் தனது சகோதரி ரங்குபாய் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்தார். அதன் மூலம் காப்பீட்டுத் தொகை தனக்கு அளிக்குமாறு அவர் எல்ஐசி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இதற்கான பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் ஒருநாள் ரங்குபாய் எல்ஐசி அலுவலகத்துக்கு தற்செயலாக வந்து தனது பாலிசி நிலை குறித்து விசாரித்தார். அவரை கண்டதும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் மெதுவாக விஷயத்தை தெரிவித்தனர். இதையடுத்து மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரகாஷ், அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY