கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வாழ்நாள் தடை நீக்கம்

45

கடந்த 2013ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. சூதாட்ட புகாரின் பெயரில் ஸ்ரீசாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, தன் மீதான வாழ்நாள் தடையை நீக்க வேண்டும், தனக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஸ்ரீசாந்த் மீது குற்றம்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த விளைவும் இல்லை என்பதால், அவர் மீதான குற்றத்தை பிசிசிஐ ஒழுங்கு நடைமுறைக் குழு விசாரித்து தண்டனை வழங்கலாம் அல்லது அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று கூறியுள்ளது. 

LEAVE A REPLY