தொப்பையை குறைக்கும் சில வழிகள்

127

அதிகம் சாப்பிட்டால் வயிறு தொப்பை போடும் என்று பலரும் கருதுகின்றனர். அது அறவே தவறு. எடையை குறைப்பதற்காக நீங்கள் உணவை தவிர்த்து வந்தால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து உடல் மெலியும். அதனால் எடை குறையாது. நீர்ச்சத்து அவசியம் தேவை. எனவே தேவையான அளவு உணவை சாப்பிட வேண்டும்.

பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

 குண்டாக இருந்தாலும் ஓடி, ஆடி ஆக்டிவாக இருந்தால் உடல் பருமனும் உங்களுக்கு ஒரு தொல்லை போல் தெரியாது.

பொதுவாகவே குறிப்பிட்ட வயத்துக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில் அதிக எடை கூடும். தொப்பை குறைய சில வழிகள்:

1. தக்காளி: கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது. தக்காளி சாறு அல்லது சூப்பாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

2. அன்னாச்சி பழம்: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. ஆனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

3. திராட்சை:

ஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

4. இஞ்சி : தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை காணலாம்.

 

LEAVE A REPLY