ஹேமில்டனில் நியூசிலாந்து -இந்திய அணிகளிடையே கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. 8 வது ஓவரை குல்தீப் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சீபெர்ட் எதிர்கொண்டார். சீபெர்ட் தனது காலை கிரீசிலிருந்து லேசாக எடுத்தார்.  அதற்குள் தோனி ஸ்டெம்பிங் செய்து விட்டார். இது அப்பீல் செய்யப்பட்டது. ரீபிளேவில் பார்த்தபோது அவுட் இல்லை என்பதுபோல தெரிந்தது. ஆனால் தோனியின் துல்லியமாக ஸ்டெம்பிங் செய்திருந்ததால் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஐசிசி வெளியிட்ட ட்விட்டரில், தோனி அந்த ஸ்டெம்பிங்கை செய்வதற்கு 0.099 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்தது. இது சர்வதேச அரங்கில் தோனியின் 191-வது ஸ்டெம்பிங் ஆகும்.

 

LEAVE A REPLY