ரீலீஸ் ஆகி 6 மணிநேரத்தில் சர்காரை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ் … விஜய் தரப்பு அப்செட்

880

தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. . விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். படம் குறித்து பல்வேறு  விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.  இந்த நிலையில் பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது. நேற்று முதல் நாளே சர்கார் படத்தை தங்கள் பக்கத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்தது.

இதையடுத்து தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிடுவதை தடுக்க சன் பிக்சர்ஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.  முக்கியமாக விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுவினரை பிடிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில்தான் படம் வெளியாகி 6 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது. இது சர்கார் படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY