ஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை

190
மதுரை  கிருஷ்ணாபுரம் காலனி, பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வந்தவர் மாரிமுத்து. அந்த கடை அருகே சில இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படும் இளைஞர்கள்,  மாரிமுத்துவிடம் இலவச டீ கொடுக்குமாறு கேட்டதாகவும் அதற்கு மாரிமுத்து மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த 6 இளைஞர்கள் மாரிமுத்துவை அவரது கடையில் வைத்தே கத்தி, பாட்டில்கள் உள்ளிட்டவைகளால் தாக்கி உள்ளனர். உயிருக்கு பயந்து சாலையில் ஓடிய மாரிமுத்துவை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY