வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை! கணவர் வெறி!

303

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் குரு முனீஸ்வரன்(42) இன்ஜினியர். இவரது மனைவி ரதிதேவி(35). இவர்களுக்கு 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஹர்ஷவர்த்தன்(6) ஹர்ஷவர்த்தினி(5) என 2 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாட்டால் ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ரதிதேவி காரியாப்பட்டி சித்தனேந்தல் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த குரு முனீஸ்வரன் மனைவியை பார்க்க வேண்டும் என்று அனுமதி வாங்கி பள்ளிக்குள் சென்றார். ரதிதேவி பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்று மனைவியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாக குத்தினார்.  ரதிதேவி ரத்த வெள்ளத்தில் மிதந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட மாணவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.

தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி அருண் மற்றும் போலீசார் ரதிதேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY