தலைவருக்கு வரலாறு தெரியல… காலை வாரும் ஈவிகேஎஸ் கோஷ்டி

269

காங்கிரஸ் வரலாறு தெரியாதவர், தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பதா? என்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ் மற்றும் ஆர்.சி. பாபு ஆகியோர் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் இருவரும் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ,தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிற்கு பிறகு எதிர்க்கட்சி என்ற நிலைக்குக் கூட காங்கிரஸ் வரவில்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இது அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது. இதை படித்த காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியும், வேதனைக்கும் உள்ளாகி உள்ளனர். காரணம் 1967ல் 50 காங்கிரஸ்  சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களோடு தமிழக காங்கிரசின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பி.ஜி. கருத்திருமன் இருந்துள்ளார். அடுத்து 1971ல் ஸ்தாபன காங்கிரசில் இருந்து 15 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று தமிழக காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பொன்னப்ப நாடாரும், மேலவை காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவராக ராஜ்ராம் நாயுடும் இருந்துள்ளனர். அதன்பின் 1984ல் 62 காங்கிரஸ் உறுப்பினர்களோடு சுப்பிரமணியன் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். அடுத்து 1991ல் 61 உறுப்பினர்களுடன் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். அதன்பின் 1996ல்  தமிழ் மாநில காங்கிரஸ் 39 உறுப்பினர்களை கொண்டு சோ.பாலகிருஷ்ணன் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார் என்பதுதான் உண்மையான வரலாறு. நிலைமை இப்படி இருக்க  காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இப்படி கூறியிருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது. ஆகவே தலைவர், காங்கிரஸ் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் படித்து தெரிந்து கொண்டு அதன்பின் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY