ஆப்கானிஸ்தான் நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே மோண்ட மோதலில் இருதரப்பிலும் 21 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களே அதிகாரம் செலுத்தி வருகின்றனர். இந்த இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதுட வழக்கம். இதில் அப்பாவி பொதுமக்களின் உயிர்களும் அவ்வப்போது பறிபோய் வருகிறது. 

இந்நிலையில், இங்குள்ள கோக்யானி மாவட்டத்தின் ஸாவா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே இன்று மோதல் வெடித்தது. இந்த மோதலில் தலிபான்கள் 18 பேரும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY