திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ராஜிவ் நகர் பகுதியில் அப்பு அய்யர் குளம் உள்ளது. சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை சப் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிதியில் 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையும் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதை அதிகாரிகள் இடிக்க முற்பட்டபோது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்து ரேஷன் கட்டிடம் இடித்து  தரைமட்டமாக்கினர்.  இதே போல் சிவன் கோவிலுக்கு சொந்தமான கட்டிடமும் இடித்து ஆக்கிமிரப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY