ஆடியோவில் இருப்பது எனது குரல்தான்… எடியூரப்பா ஒப்புதல்

55

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இரு கட்சிகளை சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.  இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வின் மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எடியூரப்பா, ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை. இது போலியானது.  போலி ஆடியோவை உருவாக்குவதில் முதல் அமைச்சர் குமாராசாமி வல்லவர். தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து தன்னை விலகுவேன் என்றார்.

 இந்நிலையில் நேற்று பேட்டியளித்த எடியூரப்பா, குமாராசாமி 3ம் தர அரசியல் செய்கிறார். எம்எல்ஏ நாகன கவுடாவின் மகன் நள்ளிரவு 12.30 மணிக்கு என்னை வந்து சந்தித்தார். அவரிடம் நான் பேசியது உண்மை தான். அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் தான். அவரை அனுப்பியது முதல்வர் குமாராசாமி தான். நாகன கவுடாவுடன் நான் பேசிய முழு ஆடியோவை வெளியிடவில்லை. அவர்களுக்கு தகுந்தார் போல சில பேச்சுக்களை மட்டும் வெளியிட்டு உண்மையை மறைத்துள்ளனர். முழு ஆடியோ விரைவில் வெளிவரும். அதில் உண்மை நிலவரம் தெரியும். சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்றார். இது தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY