பெரம்பலூரைச் சேர்ந்த ஆளுங்கட்சி விஐபி வேலை தருகிறேன் எனக் கூறி பெண் ஒருவரை பிரபல ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அந்த வீடியோவை வைத்து லோக்கல் சேனலில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறப்பட்டது. சம்மந்தப்பட்ட பெண், விஐபியின் ஆட்கள் மிரட்டியதால்  புகார் அளிக்க மறுத்து விட்டு சம்மந்தப்பட்ட வீடியோவை மட்டும் கேட்பதாக தகவல் வெளியானது.

இந்த தகவல்கள் குறித்து மாவட்ட எஸ்பி திசா மித்தலிடம் கேட்டதற்கு அவர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை எனவும், வக்கீல் அருள் கொடுத்த புகாரின் பேரில் யாருடைய பெயரும் குறிப்பிடாமல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் விஐபியால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன், தான் பேசும் ஆடியோவை இன்று பெரம்பலூரில் வக்கீல் அருள் வெளியிட்டார். இனியாவது போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட விஐபி மீது நடவடிக்கை எடுப்பார்களா? 


Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY