காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள்!

251
உடல் எடையைக் குறைக்கிறேன் என்று காலை உணவைத் தவிர்க்க கூடாது.
இவ்வாறு தவிர்ப்பவர்களிடம் ரத்தஅழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருக்கிறது. 
 
 காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது.
 

 காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாகும்  வாய்ப்பு அதிகரிக்கும்.

. உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள்  குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுபவை. 

காலை உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோன் மற்றும் ‘சாப்பிட்டது போதும்’ என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய  லெப்டின் ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும். மேலும் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 
 வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும்.

LEAVE A REPLY