பிரபல தமிழ் வில்லன் உடல் அழுகிய நிலையில் மீட்பு

309
இந்தியாவில் 1980- 90 காலகட்டத்தில் பல மொழிப் படங்களில் வில்லனாக நடித்தவர் மகேஷ் ஆனந்த் (57). இவர் தமிழில் ரஜினிகாந்துடன் ’வீரா’ விஜயகாந்துடன் ‘பெரிய மருது’ போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சன்னி தியோல். கோவிந்தா ஆகியோருடன் நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என 200 படங்களுக்கு மேல் மகேஷ் ஆனந்த் நடித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் உஷா பச்சானி என்பவரை திருமணம் செய்த அவர்,  2002ம் ஆண்டில் விவகாரத்து செய்தார். மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம் போல மகேஷ் ஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார். பல முறை கதவை தட்டியும் திறக்காததால்  போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் மகேஷ் ஆனந்த் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடலை சுற்றிலும் மதுபாட்டில்கள் கிடந்தன. உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த  போலீசார் அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY