காங்கிரசில் பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுகிறது.. அமித்ஷா கிண்டல்

68
2019 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் பிரியங்கா காந்தியும் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. லக்னோவில் அவருடைய பேரணிக்கு அதிகமான தொண்டர்கள் குவிந்தனர். பிரியங்காவின் அரசியல் வருகை குடும்ப ஆட்சியை உறுதி செய்கிறது என்று பா.ஜ விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் கோத்ராவில் பா.ஜனதா தொண்டர்களிடம் பேசிய பா.ஜ. தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆவதைப் பற்றி நினைக்க முடியுமா? காங்கிரஸ் கட்சியில் பிறப்பின் போதே பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் ஆகவில்லை, இதனால் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றார். 

LEAVE A REPLY