கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் தப்பவில்லை என்று  தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் வாஷிங்டனிலும் அதை சுற்றிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் சாலையில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கனமழையால் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் தரைதளத்திலும் வெள்ளம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. தொடரும் மழையால் அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY